பாஜக திருச்சி மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சியில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்பட்டு வருகிறது . அதேநேரத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும். அதேபோல், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிளைத் தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர் என பல்வேறு பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல் மூலம் வாக்குப்பதிவு அடிப்படையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.
அதன்படி, இதுவரை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் உள்ள 68 ஆயிரம் கிளைகளில் 47 ஆயிரம் கிளைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் 1,231 ஒன்றியத்தில் 950 ஒன்றியங்களுக்கும், 67 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக் கும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு கட்சியின் மாநில தலைமை அவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
தற்பொழுது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 33 மாவட்ட தலைவர்களின் பெயர் விவரங்களை கட்சியின் மாநில துணைத்தலைவர் எம். சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார் அதில் திருச்சி நகர் பாஜக தலைவராக இருந்த ராஜசேகரன் மாற்றம். புதிய தலைவராக ஒண்டிமுத்துவும். புறநகர் மாவட்டத் தலைவராக அஞ்சாநெஞ்சன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision