கைதிகளுக்கு யோகா பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
திருச்சி ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு அமிர்த யோகா மற்றும் தியானப் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
தமிழ்நாடு சிறைத் துறை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிறைவாசிகளுக்கும் மனநலம் மற்றும் உடல்நலத்தைப் பேணும் பொருட்டு தியானப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை நடத்தி வருகின்றது.
மாதா அமிர்தானந்தமயி மடம் மற்றும் அமிர்தா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திவரும் ஐஏஎம் (இன்டகரேட்டட் அமிர்தா மெமிட்டேசன்) என்னும் ஒருங்கிணைந்த அமிர்தா தியான நுட்பப் பயிற்சி மூலமாக அனைத்து சிறைவாசிகளும் பயனடைந்து வருகின்றனர்.
இவ்வருடம் மே முதல் அக்டோபர் வரை நேரடியாகவும் தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவும் நடைபெற்ற தியான மற்றும் யோகா பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்த சிறைவாசிகளுக்கு அமிர்தா பல்கலைக்கழகம் சார்பாக சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று வியாழனன்று நடைபெற்றது.
சிறைத்துறை திருச்சி சரகத் தலைவர் திருமதி ஜெயபாரதி அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பயிற்சியின் பலன்கள் சிறைவாசிகளின் முகங்களில் தெரிவதாகவும், பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருமாறும் சிறைவாசிகளை அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சிறைகண்காணிப்பாளர்கள் திருமதி ஆண்டாள், திருமதி ருக்மணி பிரியதர்ஷினி மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பரசுராமன் ஆகியோரும் சான்றிதழ்களை வழங்கினர்.
சிறைவாசிகளும் இப்பயிற்சியில் மூலம் தங்களுக்கு மனஅமைதி, தூக்கம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றங்களை உணர்வதால், பயிற்சிகளை தொடர்ந்து செய்வதாகவும் உறுதி கூறினர்.
நிகழ்ச்சியின்போது மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பாக பிரம்மச்சாரினி பவானி, தன்னார்வலர்கள் திரு. வெங்கடேஷ்வரராவ், திரு ஆனந்தன் மற்றும் திருமதி சாந்தி மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO