"உதவி தேவைப்படுபவர்களையும் உதவி செய்வோரையும் இணைக்கும் பாலம்" - திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி முன்னெடுக்கும் ஹெல்ப்லைன் திட்டம்!!

"உதவி தேவைப்படுபவர்களையும் உதவி செய்வோரையும் இணைக்கும் பாலம்" - திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி முன்னெடுக்கும் ஹெல்ப்லைன் திட்டம்!!

கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொருவரும் இந்த வார்த்தையை ஒலிக்காமல் இருந்திருக்க முடியாது. ஒட்டு மொத்த உலகத்தையே உலுக்கிய ஒரு நோய் கொரோனா. ஒருபுறம் நோய் தொற்றாக பல மனிதர்களை உயிரைப் பறித்த போதிலும், மறுபுறம் மனிதநேயத்தை இன்றளவும் நிலைத்து இருக்க வைத்திருக்கிறது.

Advertisement

தற்போது நிலவும் இந்த கொரோனா 2வது அலை என்பது ஒரு மிகப்பெரிய சவாலை தமிழகத்திற்கு தந்திருக்கிறது. அதிகமான இழப்புகளையும் அந்த இழப்புகளை தடுப்பதற்காக தினந்தோறும் களத்தில் நின்று பணியாற்றும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இன்றளவும் இருந்துதான் வருகின்றன.

Advertisement

பரவிவரும் கொரோனாவை கருத்தில் கொண்டும், உதவும் மனப்பான்மையோடு திருச்சி மக்களுக்காக திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி சார்பாக "கோவிட் ஃபிரி திருச்சி" என்னும் திட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்பவர்களையும் இணைக்கும் ஒரு பாலமாகவும், கொரோனா நோயாளிகளுக்கு உதவுவது, ஆக்சிசன் வசதி, படுக்கைகள் ஏற்படுத்துவது, இரத்தம் தேவை போன்ற உதவிகளுடன் உதவ திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவோடு ஹெல்ப்லைன் இணையதளத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதில் ஹோலி கிராஸ் கல்லூரியின் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், டாக்டர்கள் குழு மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் ஹெல்ப்லைனைக் கையாளும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போர்டல் மற்றும் ஹெல்ப்லைனைத் தொடங்கி வைத்தார். ஹெல்ப்லைனுக்கு முதலாவதாக அழைப்பு விடுத்த அவர், திருச்சி மக்களுக்கு உதவ முன்வந்த கல்லூரி தன்னார்வலர்கள் குழுவையும் வாழ்த்தினார். மேலும் இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா பிரிஜ்ட், சாய் ஹெல்த்கேர் மருத்துவர் நரசிம்மராவ் மற்றும் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் உள்ளவர்கள் 7823995552 என்ற எண்ணின் மூலமாகவும் மற்றும் COVID-19 தொடர்பான உதவிக்கு www.covidfreetrichy.in என்ற போர்ட்டலை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்த தன்னார்வலர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC