பொம்மை தயாரிப்பில் அசத்தும் திருச்சி பெண்மணி

பொம்மை தயாரிப்பில் அசத்தும் திருச்சி பெண்மணி

நமக்கு பிடித்தவர்கள் அன்பாக ஒரு பரிசு கொடுத்தால் அதிலே அதிக சந்தோசம் கிடைத்துவிடும். ஆனால், பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிக சந்தோஷத்தை உண்டுபண்ணும். அந்த வகையில் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல மிருதுவான பொம்மைகள் மூலம் மகிச்சியாக்குங்கள். பொம்மைகளை நாள்முழுவதும் தூக்கி செல்லும் குழந்தைகளுக்கு நல்ல தரமான மற்றும் நீடித்து உழைக்க கூடிய பொம்மைகளை கொடுத்தால் தான் அதனுடன் நீண்ட நாள் விளையாட முடியும். அதே சமயம் அவை நல்ல மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் (Soft toys). விலங்குகள் வடிவில் இருக்கும் பொம்மைகள் தான் பெரும்பாலான குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

குழந்தைகளுக்கு பிடித்த மிக அழகான பொம்மைகள் தயாரிப்பதில் 27 வருடங்களாக தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார் திருச்சியை சேர்ந்த கமலா..... தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கையில், எந்த வேலையா இருந்தாலும், அதுல கிடைக்கிற திருப்திதான் முக்கியம். இதுல எனக்கு அது நிறைய கிடைக்குது’’ விளையாட்டா கத்துக்கிட்ட விஷயம் தான் இது ,நாளடைவில் இதுவே எனக்கான ஒரு அடையாளமாக மாறிப் போய்விட்டது. குழந்தைகளுக்கு பிடிச்சத தயாரிக்கிறேன் அது அழகாவும் இருக்கணும் அதே சமயம் தரமானதாக இருக்கும் தரமானதாகவும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வேன். இந்த ஒரு விஷயத்துல மட்டும் என்ன நான் சமரசம் செய்து கொள்வதே இல்லை.

திருமணத்திற்கு பிறகு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து தொடங்கியதே இந்த பொம்மை தயாரிப்பு நாளடைவில் அதுவே ஒரு அடையாளமா மாறுச்சு. கல்லூரிகளுக்கு சென்று வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன் அருகில் சுய உதவி குழுக்கள் மூலம் பல பெண்களுக்கும் இதை கற்றுத்தர ஆரம்பித்து இன்று அது மூலம் பல பெண்கள் தனக்கான தனி தொழிலாக தொடங்கி இதை செய்து வருகிறார்கள்.

ஏதாவது ஒன்னு புதுசா கத்துக்கிட்டே இருக்கணும் நம்மகிட்ட இருக்கிற திறமையை அப்பதான் நாம தெரிஞ்சுக்க முடியும் அப்படி ஒவ்வொரு விஷயமா கத்துக்கிட்டு சாம்பிராணி தயாரிக்கிறது, பினாயில் தயாரிக்கிறது என புதுசு புதுசா கத்துக்கிட்டேன் இப்போ கடந்த ஆறு மாத காலமா கருவேப்பிலை, தக்காளி தொக்கு, முருங்கைக்கீரை பொடி, வத்தல், இனிப்பு வகைகள் தயாரிச்சு அதையும் விற்பனை செய்து வருகிறேன். குடிசை தொழிலா அங்கீகாரம் ஆனதற்கு பிறகு நமக்காக நாமே உழைச்சாக வேண்டும் என்று தொடர்ந்து இதை செய்து வருகின்றேன். திருச்சியில் உள்ள பல கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கும் இந்த பொம்மை தயாரிப்பு குறித்து வகுப்புகள் எடுத்துள்ளேன்.

இந்த தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் தாண்டி இது எனக்கான ஒரு அடையாளத்தையும் மன நிறைவையும் தருவது என்னுடைய வாழ்க்கையில் கடந்த 27 ஆண்டுகளாக இதை தொடர்ந்து செய்ய ஊக்கமளிக்கிறது என்றார். 50 வயதிலும் மனநிறையோடு தனக்கு பிடித்தவற்றை செய்து வரும் கமலா   ஆர்வம் இருந்தால் வயதுஒரு தடை இல்லை என்பதை இளைய தலைமுறைக்கு சொல்லாமல்  சொல்கிறார் .....

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision