ரூ.5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு ரூ.4,950-ஐ இழந்த திருச்சி தொழிலாளி

ரூ.5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு ரூ.4,950-ஐ இழந்த திருச்சி தொழிலாளி

திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மபூகான் (42). இவர் சாலையோர பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அவரது செல்போனில் முகநூல் பக்கத்தை பயன்படுத்தி கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு லிங்க் வந்தது.

அதில் 'இந்திய அரசின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.5 ஆயிரம் இலவசமாக வவழங்கப்படுகிறது என்ற குறுஞ்செய்தி இருந்துள்ளது. இதனால் மபூகான் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். இதையடுத்து அவரது செல்போனுக்கு ஒரு சுரண்டல் அட்டை வந்தது. அதை அவர் சுரண்டி பார்த்த போது ரூ.4,950 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை கிளிக் செய்தவுடன் அந்த வலைத்தளபக்கம் அவரது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலிக்கு சென்றுள்ளது. 

அத்துடன் ரகசிய எண்ணை கேட்கவே, அவர் ரூ.4,950 தனது கணக்கிற்கு வரும் என்று நினைத்து ரகசிய எண்ணை பதிவு செய்துள்ளார். உடனே அவருடைய கணக்கில் இருந்து ரூ.4,950 குறைந்துவிட்டது. அப்போது தான், அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுக்குறித்து மபூகான் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மபூகான் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு வங்கிக்கணக்கிற்கு சென்றுள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision