திருச்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பரவும் அம்மை நோய் - அச்சத்தில் பெற்றோர்கள்
திருச்சி ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சிக்கு கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையில்..... திருச்சி ஸ்ரீரங்கம் வார்டு எண்- 2, கீழச்சித்திரை வீதியில் இயங்கிவரும் டாக்டர் ராஜன் நடுநிலைப்பள்ளியில் 1வது வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 600 மாணவ மாணவியர்கள் படித்து வருகிறார்கள். இங்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மிக தீவிரமாக நோயாக பரவி வரும் கொத்தமல்லி என்னும் வகையை சார்ந்த அம்மை நோயால் தினசரி சராசரியாக 5 முதல் 10 மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பள்ளியில் ஏற்கனவே இட நெருக்கடியால் அவதியுரும் மாணவ மாணவியர்கள், அவ்வப்போது பல விதமான நோய் தொற்றுகளுக்கு ஆளாகி அவதியுற்று வருகின்றனர். மாணவ மாணவியர்கள் தற்போது அம்மை நோய்யால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டு உள்ளது. அம்மை நோய்யை கட்டுப்படுத்த எந்தவித முன்னேச்சரிக்கை எடுக்காத இப்பள்ளியின் பொறுப்பு கல்வி அதிகாரிகளும் தலைமை ஆசிரியரும் இதனை மறைத்து வெளியே தெரியாமல் ஏமாற்றி மிக நடந்து கொள்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இங்கு தினசரி மருத்துவக்குழு வருகை புரிந்து அம்மை நோய்யயை கட்டுப்படுத்த இப்பள்ளியை தொடர் கண்காணிப்பு வளையத்திலேயே வைத்து இப்பள்ளியை நோய்யிலிருந்து காக்க மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் இதனால் ஸ்ரீரங்கம் சுற்றியுள்ள பிற பள்ளிகளுக்கும் இது பரவும் அபாய நிலை ஏற்பட்டு விடும், அரசு பொதுத்தேர்வு நெருங்கி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தீவிரமாக பரவும் அம்மை நோய்யை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க கல்வியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனால் தினமும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்குள் அனுப்பும் போது வேப்ப மரத்திலிருந்து வேப்பிலை கிளைகளை உடைத்து அவர்கள் கையில் கொடுத்து அனுப்பி வைக்கும் நிகழ்வும் காண முடிகிறது. திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பள்ளியில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சுகாதாரத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அலுவலர் உடனடியாக இதில் தலையிட்டு இந்த பள்ளி மாணவர்களையும் அடுத்து பரவ போகும் ஆபத்துக்களையும் தடுக்க வேண்டும் என
ஸ்ரீரங்கம் மக்கள் மற்றும் இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களின் சார்பாகவும் ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் வேண்டுகோளாக திருச்சி மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கிறது. உடனடி நடவடிக்கை எடுக்குமா? திருச்சி மாநகராட்சி - சுகாதாரத்துறை...??.