சொத்துகளை அளவீடு செய்யும் 'ட்ரோன்' - திருச்சி மாநகராட்சி முடிவு
சொத்துகளை அளவிடுவதில் ஏற்படும் காலதாமதத்தையும், மனிதத் தவறுகளையும் அகற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவுசெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேமரா, நிலவியல் தகவல் சாதனங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட இந்த ட்ரோன்களின் உதவியுடன், வசிப்பிடங்கள், வணிகப் பயன்பாட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துகளின் அமைப்பை ஆவணங்களுடன் எளிதில் ஒப்பிட முடியும் என்று கூறிய அதிகாரிகள், அதற்கேற்ப வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.
இந்த நிதியாண்டில், திருச்சி மாநகராட்சியின் வருவாய் 997.7 கோடி ரூபாயாகவும், செலவு 1087.6 கோடி ரூபாயாகவும் உள்ளது. வரி பாக்கியை வசூலிப்பது, சொத்துவரி ட்ரோன்களைப் பயன்படுத்தி சரியாக மதிப்பீடு செய்து வரிவசூல் செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் பற்றாக்குறையை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision