திருச்சி ரயில்வே நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்கு கிருமிநாசினி வசதி

திருச்சி ரயில்வே நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்கு கிருமிநாசினி வசதி

திருச்சி ரயில்வே ஜங்ஷன் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு கிருமிநாசினி வசதி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையம் உட்பட திருச்சி ரயில்வே கோட்ட ரயில் நிலையங்களில் தனியார் அமைப்புடன் இணைந்து பயணிகள் காலால் மிதித்து கிருமிநாசினி பெறும் வசதி திருச்சி கோட்டம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

NINFRIS புதுமையான லாபமற்ற வருவாய் யோசனைத் திட்டத்தின் கீழ் திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் 20, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் 8, கும்பகோணம் 7, மயிலாடுதுறை 7, விழுப்புரம் ரயில் நிலையத்தில் 8 என மொத்தம் 50 கிருமிநாசினிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று நடைபெற்ற  தொடக்க விழாவில் திருச்சிராப்பள்ளி கோட்ட முதன்மை வணிக மேலாளர் டாக்டர் I.செந்தில்குமார் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr