பயணிகளின் அலட்சியத்தால் ரெயில் பெட்டியில் தீ விபத்து எதிரொலி திருச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ரெயில்வே பாதுகாப்பு படை

பயணிகளின் அலட்சியத்தால் ரெயில் பெட்டியில் தீ விபத்து எதிரொலி திருச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ரெயில்வே பாதுகாப்பு படை

தீ விபத்தை ஏற்படுத்தும் பொருட்களை ரெயில்களில் கொண்டு செல்லுதல் மற்றும் தொலைதூர ரெயில்களில் மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்தல் போன்ற ரெயில்பயணிகளின் அலட்சியமான செயல்களால் சமீபத்தில் வடமாநிலத்தில் ரெயில்பெட்டிகள் தீக்கிரையான சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் ரெயில்நிலையங்களில் பயணிகளிடம் விபத்தில்லா பயணத்தை வலியுறுத்தும் வகையில் தீ விபத்தை ஏற்படுத்தும் பொருட்களை கையாள்வது மற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கவும் மற்றும் ரெயில்களில் பாதுகாப்புடன் பயணிப்பது குறித்து

ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே நிர்வாகம் பாதுகாப்பு துறையுடன் இணைந்து திருச்சி ஜங்சன் ரெயில்நிலையத்தில் பயணிகளிடம் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெயில்வே பாதுகாப்பு படை திருச்சி கோட்ட முதுநிலை கோட்டமேலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு துறையினர் இணைந்து கோவையிலிருந்து வந்த ஜன்சதாப்தி ரெயில் பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி அறிவுறுத்தினர்.

மேளங்கள் முழங்க பதாகைகளை ஏந்தியபடி நடைபாதையில் பேரணியாகச் சென்று பயணிகளிடம் பாதுகாப்பான ரெயில்பயணம் மேற்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வருடத்தில் ஒரிருமுறை இதுபோன்ற தீ விபத்து சம்பவங்கள் ரெயில்களில் நடைபெற்று வருவது வாடிக்கையாகிறது. திருச்சியில் உள்ள முக்கிய ரெயில்நிலையங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் எனவும், ரெயில்பயணிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn