புனித சிலுவை கல்லூரியில் ஆசிரியர் தின விழா

புனித சிலுவை கல்லூரியில் ஆசிரியர் தின விழா

புனித சிலுவை (தன்னாட்சி) கல்லூரியில் ஆசிரியர் தின விழா கல்லூரி வளாகத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. இறை வழிபாடு மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் நிகழச்சி தொடங்கியது. விழாவில் டாக்டர் அ. ஜெசிந்தா ராணி, இணை பேராசிரியர் மற்றும் தமிழாய்வுத்துறை தலைவர் வரவேற்புறை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர், எழுத்தாளர், கல்வியாளர், ஊக்கமளிக்கம் பேச்சாளர், விவாதிப்பாளர் எனப் புகழ்பெற்று விளங்கும் நீதிபதி பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா கலந்து கொண்டார். செயலர் அருட்சகோதரி முனைவர் ஆனி சேவியர், மற்றும் முதல்வர் அருட்சகோதரி முனைவர் இசபெல்லா இராஜகுமாரி, அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு பூங்கொத்து வழங்கி சிறப்பிக்கப்பட்டார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் நடனம், நாடகம் மற்றும் ‘சிறந்த ஆசிரியரின் பரிணாமம்’ குறித்த குறும்பட காட்சி போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.

முனைவர் நோரனா ஐனஸ் அன்றைய நாளின் இராணி பட்டத்தை வென்றார். இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரின் உரை இடம்பெற்றது. அதில் தன் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, ஆசிரியர்களே மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்றார். கேட்டலே கற்றலுக்கு அடிப்படை எனவும் மாணவர்கள் செயல் ஊக்கத்துடன் தங்கள் இலக்கில் கவனம் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறித்தினார். மேலும் அனைத்து சூழ்நிலைகளிலும் சுயமரியாதையோடும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

மூன்றாம் ஆண்டு பயிலும் ஆங்கிலத்துறை மாணவி செல்வி ஸ்ரீநிதி நன்றியுரையை தொடர்ந்து தேசிய கீதத்துடன் ஆசிரியர் தின விழா இனிதே நிறைவுற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision