குடும்பத்திற்காக விடியலை தேடிக்கொண்டிருக்க கூடிய கட்சி திமுக ஶ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பேச்சு

குடும்பத்திற்காக விடியலை தேடிக்கொண்டிருக்க கூடிய கட்சி திமுக ஶ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பேச்சு

திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் திருவரங்கம்கால் திருவானைக்கோவில், பாரதி நகரில் பிரச்சாரம் செய்தார். பின்னர் அப்பகுதி மக்கள் மத்தியில் பேசிய அவர்... அம்மாவின் அரசு அண்ணன் எடப்பாடியார்  தலைமையில் எண்ணிலடங்கா நல்ல திட்டங்களை உங்கள் வீடுதேடி கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். வாக்குறுதிகள் மட்டும் அளிக்கும் அரசு வேண்டுமா அல்லது நலத்திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் அரசு உங்களுக்கு வேண்டுமா என்பதை சிந்தித்து பாருங்கள். மேலும் கந்துவட்டி, வழிப்பறி, அடுத்தவர் சொத்தை நில அபகரிப்பு செய்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயலில் ஈடுபடும் அனைவரும் திமுக அணியில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அமைதியான முறையில் தொழில் செய்ய முடியாது.

மேலும் சாலை ஓரங்களில் சிறு காய்கறி வியாபாரிகள், கம்பங்கூழ் கடை வைத்திருப்பவர்கள், தர்பூசணி பழகடைக்காரர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்கள் என அனைவரிடமும் அன்றாடம் தண்டல் வசூல் செய்வார்கள். இதுபோன்ற கொள்ளை கூட்டத்தை விரட்டி அடிப்போம். நீங்கள் அமைதியான முறையிலேயே வியாபாரம் செய்வதற்கு, வணிகப் பெருமக்கள் அமைதியான முறையிலேயே தொழில் செய்வதற்கும், தமிழகத்திலே அமைதியும், வளர்ச்சியும், தரக்கூடிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரியுங்கள் என கேட்டுக் கொண்டார். 
அதுபோல உங்களுக்கு உழைக்கவே பிறந்த இயக்கம் அதிமுக இயக்கம் “உழைப்பவனே உயர்வான்” என்று கூறியவர் எம்.ஜி.ஆர் அவர்கள். “உழைத்து உயர்ந்தவர் மட்டுமே இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்” என்று போதித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இவர்கள் வழியில் வந்த விவசாய முதல்வர் எடப்பாடியார் அவர்களின் ஆட்சியிலே அமைதி, வளம், வளர்ச்சி, உயர்வு, பசுமை என்று சிறப்பான முறையிலே ஆட்சி செய்து வருகிறார். திமுகவை போல தான், தன் குடும்பம் மட்டும் தான் வாழவேண்டும் என்று இல்லாமல் அதிமுக அரசு நாடு, வீடு, மக்கள் நலம் என்ற குறிக்கோளோடு இயங்கக்கூடிய இயக்கம் மக்களுக்காகவே பிறந்த இயக்கம் மக்களாட்சியை மதிக்கக் கூடிய இயக்கம் மக்களாட்சியின் மாண்பை போற்றக் கூடிய இயக்கம் அதிமுக இயக்கம்

வெற்றிநடை போடுகின்ற தமிழகம் என்று சொல்லுவது விவசாய முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு ஆனால் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரபோராரு என்று அவர்கள் குடும்பத்திற்காக விடியலை தேடிக்கொண்டிருக்க கூடிய கட்சி திமுக எனவே நல்லாட்சி தொடர்ந்திட அதிமுகவை ஆதரியுங்கள் என கேட்டுக்கொண்டார். இந்திய துணை கண்டத்திலே 108 திவ்விய தேசங்களிலே ஒன்றாக இருக்கக்கூடிய முதல் தேசமாக திருவரங்கம் விளங்குகிறது. பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றான நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்கோவில்அந்த நீர் ஸ்தலம் பெற்று இருக்கக்கூடிய சிறப்பை, புகழை பண்டைய காலத்தில் இருந்த நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் தெரிவித்தார். அப்போது நிகழ்சியில் திருவானைக்காவல் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, திருவரங்க பகுதி செயலாளர் சுந்தர்ராஜ் மற்றும் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81