மூத்த பத்திரிகையாளர் கோவிந்தசாமி மறைவு - அமைச்சர் கே.என்.நேரு இரங்கல் செய்தி
தினமலரில் நீண்ட காலம் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற மூத்த செய்தியாளர் கோவிந்தசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டதும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
தினமலர் பத்திரிக்கையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக தலைமை செய்தியாளராக, நேர்மையுடன் பணியாற்றி வந்த கோவிந்தசாமியை நான் நன்கு அறிவேன். முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தால் தினமலர் கோவிந்தசாமி வந்துவிட்டாரா என்று கேட்கும் அளவிற்கு, அவருடன் நட்பு பாராட்டியவர்.
அவரது பல கட்டுரைகளை செய்திகளை தொடர்ந்து படித்திருக்கிறேன். செய்தியாளர் கூட்டத்தின் போது பல ஆக்கப்பூர்வமான கேள்விகளை அவர் கேட்டு அவற்றை அனைவரும் கவரும் வகையில் கோர்வையாகவும், தெளிவாகவும் சிந்திக்கும் வகையில் எழுதி உள்ளதை நான் பலமுறை பாராட்டியுள்ளேன்.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் தினமலர் பத்திரிக்கை நிர்வாகத்திற்கும் அவரது பத்திரிகை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision