தொட்டியத்தில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்புக் கூட்டம் 

தொட்டியத்தில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்புக் கூட்டம் 

திருச்சி மாவட்டம் தொட்டியம் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் "2003- காந்தள்" மாணவ - மாணவிகள் ஏற்பாடு செய்த 20 ஆண்டுகளுக்குப் முன் பயின்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இக்கூட்டம் பள்ளி தாளாளர் அருட் தந்தை யூ.எஸ். ஆரோக்கியசாமி தலைமையில், முன்னாள் பள்ளி மாணவர்களும், தொழிலதிபருமான திமுக வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் ப. சரவணன், பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு தங்கள் வளர்ச்சிக்கு இந்தப் பள்ளி எவ்வாறு உதவியது எனவும், தங்களால் பள்ளிக்கு உதவுவது குறித்து பேசினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் பள்ளி தாளாளர்கள் அருட் தந்தை வி.ஐ.பீட்டர், அருட் தந்தை எஸ். ஜான்கென்னடி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை கு.சேவியர், அருள் சகோதரிகள் கித்தேரியன், ஒஃபிரியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பவுலினமேரி, துணை தலைமை ஆசிரியர் ஜான் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.

இதில் பேசிய முன்னாள் பள்ளி தாளாளர் அருள் தந்தை வி.ஐ.பீட்டர் 22 ஆண்டுகளுக்கு பின்பு உங்களை சந்தித்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பள்ளி தொடங்கி 57- ஆண்டுகள் ஆகிறது. 60 -ஆவது ஆண்டை நோக்கி செல்கிறது இந்த மண்ணை நேசிக்கும் உங்களால் மட்டுமே இந்த பள்ளி வளர்ச்சிக்கு மருந்தாக பயன்பட முடியும் என தெரிவித்தார்.

மேலும் வீட்டில் பூஜை அறை எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைத்து பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த மனிதனாக ஆக முடியும் தாய் மொழியில் எவன் ஒருவன் கற்கின்றானோ அவனே சிறந்த அறிவாளியாக மாறலாம் அனைவரும் இந்த பள்ளி மேல்நிலைப் பள்ளியாக மாற்ற உறுதுணையாக இருக்க வேண்டும்வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக ஆசிரியர் ஜான்சி ராணி அனைவரையும் வரவேற்றார் முடிவில் காந்தள் 2003- மாணவன் நன்றி கூறினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அன்புரோஸ் சிவகுமார் ரிஷி ஆரோக்கிய மேரி மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் 2003- ஆம் ஆண்டு இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn