திருச்சியில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ் - ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் 

திருச்சியில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ் - ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் 

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் திருச்சி மாவட்டத்தில் 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இன்று காலை 4 மணிக்கு ரசிகர்களின் காட்சி முதல் காட்சியாக வெளியிடப்பட்டது. இதனை அடுத்து இரண்டாவது காட்சி 7 மணிக்கு ரசிகர்கள் காட்சியாக அதன் பின்பு பொதுமக்கள் முன்பதிவு செய்த டிக்கெட்களுக்கான காட்சிகள் திரையிடப்படுகிறது.

முன்னதாக இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள சோனா மீனா எல்.ஏ சினிமாஸில் விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என அரங்கை அதிர வைத்தனர். இளம் பெண்களும் இளைஞர்களும் இணைந்து ஆட்டமாடி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை காண திரையரங்கிற்கு சென்றனர். இந்நிகழ்வுகளை விஜய் ரசிகர் மன்ற  மத்திய மாவட்ட தலைவர் சுந்தர், மாவட்ட பொறுப்பாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ளே எல்.ஏ சினிமாஸில லும் திரைப்படத்தை கண்டு ரசித்து விட்டு வரும் ரசிகர்களுக்கு தனியாக நடன காட்சிகளும் திரையரங்க வாயிலில் நடந்தது .ரசிகர்கள் இத்திரைப்படத்தை ஆர்வமாக அதிகாலை 3 மணிக்கே திரையரங்கிற்க்கு வந்து வரிசையில் நின்றனர். விஜய்க்கு மிகப்பெரிய கட்டவுட், பேனர்களும் திரையரங்கு வாயிலில் வைக்கப்பட்டு மாலைகள் போடப்பட்டு ஆரவாரத்துடன் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO