தங்க தாலி செயினை பறிக்க முயன்ற நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தங்க தாலி செயினை பறிக்க முயன்ற நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களிடம் பணத்தை பறித்து செல்லும் குற்றவாளிகள், பெண்களிடம்

நகைகளை பறித்து செல்லும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த (08.04.2023)-ம் தேதி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர், உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை அருகில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தங்க தாலி செயினை பறிக்க முயன்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த சங்கர் (23) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில், எதிரி சங்கர் என்பவர் மீது கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரிடம் தங்க செயினை பறித்ததாக ஒரு வழக்கும், துணிக்கடை ஊழியரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒரு வழக்கு உட்பட 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

எனவே, எதிரி சங்கர் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், திருட்டு மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து,

திருச்சி மாநகர காவல் M.சத்திய பிரியா, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் ஆணையர் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரியின் மீது குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn