இறுதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு எழுதிய சிறைவாசிகள்

இறுதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு எழுதிய சிறைவாசிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பாக சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2023 - 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சியிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மத்திய சிறையிலுள்ள சிறைவாசிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தினசரி 3 மணி நேரம் என்று 6 மாத காலத்திற்கு முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் (2023-2024)ம் ஆண்டு 123 கற்பவர்களும், 2 கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகிறது. சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டத்தில் (23.03.2023) அன்று இறுதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. இதற்கு காலை 10 முதல் 5 மணி வரை தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அறை கண்காணிப்பாளர்களாக சிறை ஆசிரியர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்களாக சிறையில் பணிபுரியும் ஜெயிலர் அவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இத்தேர்வில் மொத்தம் 123 (ஆண்கள் 62 மற்றும் பெண்கள்- 61) கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சிறைக் கண்காணிப்பாளர் ஆண்கள் மற்றும் பெண்கள். உதவி திட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision