தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பிறந்த நாள் விழா - இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்டம் துவக்கம்
தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்ட மகளிர்க்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் சுமார் ஆயிரம் மகளிருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வைப்புத் தொகை செலுத்தி அன்றாடம் தங்களின் வரவுகளை சேமிக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மகளிருக்கு சேமிப்பு வைப்பு தொகை அட்டையை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் திருச்சி தலைமை அஞ்சலக முதுநிலை அதிகாரி ராஜ்குமார், துணை அஞ்சலக அதிகாரி சீனிவாசன் மற்றும் பகுதி செயலாளர் விஜயகுமார், வட்ட செயலாளர்கள் தங்கவேலு, சண்முகம் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இதில் அமைச்சர் பேசியதாவது, இந்த மேடையில் நாங்கள் அமர்வதற்கு காரணமான தாய்மார்களை வணங்குகிறோம். தமிழக துணை முதல்வர் மற்றும் எனது பிறந்த நாளை முன்னிட்டு 16-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மண்டலக்குழு தலைவருமான மதிவாணன் 16-வது வார்டுக்கு உட்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் பெண்களுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 100.00 செலுத்தியுள்ளார்.
நானும் இந்த 16வது வார்டுக்கு உட்பட்டவன் என்ற முறையில் எனது மனைவி பெயரிலும் வங்கி கணக்கு புத்தகம் துவக்கி அதில் 100 ரூபாய் செலுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மகளிருக்காக கலைஞர் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து உட்பட பல்வேறு மகளிர் நலன் சார்ந்த திட்டங்களை உருவாக்கி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். இதை பயன்படுத்தி மகளிர் அனைவரும் பயன்பெற வேண்டும். இந்த சேமிப்பு திட்டத்தை மகளிர் ஆகிய நீங்கள் கைவிடாமல் தொடர வேண்டும் என்று பேசினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision