ம.தி.மு.க கொடி மரம் இடித்து அகற்றம் - ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கணவர் மீது புகார்
மறுமலர்ச்சி தி.மு.க திருச்சி வடக்கு மாவட்ட செயலார் T.T.C.சேரன் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனு அளித்தார். அதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், திருவாசி திருச்சி - சேலம் மெயின் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி ஓரமாக ம.தி.மு.க கொடிமரம் கல்வெட்டுடன் சுமார் 32 ஆண்டுகளாக அதே இடத்தில் உள்ளது.
கடந்த (29.11.24) மாலை 6.30 மணிக்கு திருவாசி ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி முருகேசன் அவரது கணவர் முருகேசன் இவரது தூண்டுதலின் பேரில் JCB இயந்திரம் மூலம் கல்வெட்டுடன் உள்ள கொடிமரத்தினை உடைத்து சாலையோரம் வீசிசென்றனர். அருகில் இருந்த தி.மு.க கொடி மரமும் இடித்து சென்றனர். தாங்கள் (ஆய்வாளர்) தொடர் நடவடிக்கை எடுப்பதாக சம்பவ இடத்தில் உறுதியலித்தன் பேரில் இரு கட்சியினறும் அமைதியாக கலைந்து சென்றோம்.
இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன் விசாரனை கூட செய்யவில்லை எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. இதற்கு முழு முதல் காரணமான ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision