கொலை குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட  10 பேருக்கு ஆயுள் தண்டனை - அபராதம் விதிப்பு

கொலை குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட  10 பேருக்கு ஆயுள் தண்டனை - அபராதம் விதிப்பு

திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள  பிராட்டியூர் டீ கடை அருகில் கடந்த 26.06.2013-ஆம் தேதி இரவு சங்கர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் இரண்டு சக்கர வாகனத்தல் பிராட்டியூர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு டாடா ஏஸ் சரக்கு வாகனம் உரசுவது போல சென்றதாக அந்த வாகனத்தின் ஓட்டுநருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாமலைவாசன் உள்ளிட்ட 5 நபர்கள், பிராட்டியூர் டி.டி.கோச் அருகில் டிபன் கடை நடத்தி வரும் ராஜேந்திரன் (35), என்பவரை தாக்கியும், அவரது டிபன் கடை மற்றும் பொலிரோ வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தியள்ளனர். இதுதொடர்ந்து மேற்படி காயம்பட்ட ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இவ்வழக்கினை திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைலயத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மேற்படி சம்பவத்தில் காயம்பட்ட ராஜேந்திரன் என்பவரின் உடன் பிறந்த தம்பியான 1) ராஜமாணிக்கம் (28), த.பெ.மூக்கன், ராம்ஜிநகர், திருச்சி என்பவர், அவரது ஆதரவாளர்கான 2) சங்கர், (24), த.பெ. ஆனந்தன், 3) தர்மா (எ) தர்மராஜ் (23), த.பெ. ஆறுமுகம், 4) மோகன் (எ) நீலமேகம் (25), த.பெ. ஜம்புலிங்கம், 5) சம்பத் (எ) சம்பத்குமார் (26), த.பெ. கோவிந்தராஜ், 6) வடிவேல் (31), த.பெ. முத்தையன், மயிலாடுதுறை, 7) மணிவேல் (28), த.பெ.வைத்தியலிங்கம்,

8) பிரபு (24), த.பெ. மாணிக்கம், 9) மோகன்ராஜ் (24), த.பெ. ஜம்புலிங்கம் மற்றும் 10) ஜம்புலிங்கம், த.பெ.ஜம்புநாதன் ஆகியோர் ஒன்றுகூடி, மாமலைவாசனின் ஆதரவாளரான சுப்பன் (எ) பாலசுப்பிரமணியன் (60), த.பெ. கொக்கி கிருஷ்ணன், ஹரிபாஸ்கர் காலனி, ராம்ஜிநகர், திருச்சி மற்றும் ஆறுமுகம் (46), த.பெ. அம்மாசி (எ) ஆண்டவர், காந்திநகர், ராம்ஜிநகர், திருச்சி ஆகியோரை கடந்த 27.06.2013-ஆம் தேதி பெரிய கொத்தமங்கலம் பொது குளம் அருகில் வைத்து, அரிவாள் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் சுப்பன் (எ) பாலசுப்பிரமணியன் என்பவரை சம்பவ இடத்திலேயே கொலை செய்துள்ளனர்.

ஆறுமுகம் என்பவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காயம்பட்டட ஆறுமுகம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கினை எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் புலன்விசாரணை செய்து சம்மந்தப்பட்ட 10 எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். இவ்வழக்கின் புலன் விசாரணை முடிந்து எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, வழக்கு கோப்பிற்கு எடுக்கப்பட்டு பின்னர் 3-வது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்து,

இன்று 30.09.2021-ம் தேதி மேற்படி 10 எதிரிகளுக்கும், சுப்பன் (எ) பாலசுப்பிரமணியன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், அபராதம் ரூபாய்.5000, அதை கட்டத் தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று நீதிபதி தங்கவேல் தீர்ப்புரை வழங்கினார்கள். இக்கொலை வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, சம்மந்தப்பட்ட 10 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn