ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்

ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், தவளைவீரன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களும், 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9050 மதிப்பீட்டில் 1 பயனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.4.41 இலட்சம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், வேளாண் துறையின் சார்பில் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் 68 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 610 பயனாளிகளுக்கு 1 கோடியே 25 இலட்சத்து 66 ஆயிரத்து 759 ரூபாய் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் பி.அப்துல்சமது, வையம்பட்டி ஒன்றியக் குழுத் தலைவர் ந.குணசீலன், வருவாய் கோட்டாட்சியர் உ.முருகேசன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வம், மணப்பாறை வட்டாட்சியர் திருமதி வி.தனலட்சுமி, ஊராட்சி மன்றத்தலைவர் ஆறுமுகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn