திருச்சி கே ஆர் டி ஹீரோவின் புதிய பைக் அறிமுக விழா

May 26, 2023 - 10:01
May 26, 2023 - 10:26
 857
திருச்சி கே ஆர் டி ஹீரோவின் புதிய பைக் அறிமுக விழா

திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள கே.ஆர்.டி மோட்டார் ஹீரோ நிறுவனத்தின் சூப்பர் ஸ்பௌண்டர் எக்ஸ்டெக்(XTEC) 125CC பைக் அறிமுகவிழா நடைபெற்றது. விழாவில் திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஜோசப் நிக்சன், ஹீரோ புதிய வாகனத்தை அறிமுகம் செய்து வைத்து வாடிக்கையாளருக்கு முதல் வாகனத்தின் சாவியை வழங்கினார். 

அருகில் KRT Heroவின் செயல் இயக்குணர் சிபு ரெங்கராஜன் மற்றும் பாலகிருஷ்னன் உள்ளனர். KRT Heroவின் பொது மேலாளர் சரவணன் கூறுகையில்.... இந்த சூப்பர் ஸ்பெளண்டர் 125cc-ல் LED ஹெட்லைட், டிஜிட்டர் மீட்டருடன் புளூடூத் வதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.இத்துடன் வாகனம் ஓடும் வேகத்தை பொறுத்து மைலேஜ் காண்பிக்கப்படும். மேலும் சைடு ஸ்டாண்டு இஞ்சின் கட்ஆப் பொறுத்தப்பட்டுள்ளது. என்றார். இந்த விழாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள், ஒர்க்ஷாப் உரிமையாளர்கள், நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn