திருச்சியில் பலத்த காற்றுடன் மழை- பவர் கட் இருளில் நகரம்
திருச்சி மாவட்டத்தில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் கண்டோன்மென்ட் தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரங்களில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
நீதிமன்றம் அருகே மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருச்சி புத்தூர் சிக்னலில் காவல்துறையினர் வெயிலுக்காக வாகன ஓட்டிகள் நிழலில் நிற்பதற்கு அமைக்கப்பட்ட துணி பந்தல் பிரேம் ஒடிந்து தொங்கியது. மழையைவிட காற்று பலமாக வீசியதால் மாநகரில் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இதையடுத்து பலத்த காற்று வீசியதால் மாநகரில் மின்தடை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision