கள ஆய்வு பணிகளை மேற்கொண்ட திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர்
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிவுறுத்தலின் படி திருப்பராய்துறை பகுதியில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்ட திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர். திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில் பாதசாரிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் சாலையை பாதுகாப்பாக நடப்பதற்கு வழி செய்து தர வேண்டும் என்று பொதுமக்களும், சாலை பாதுகாப்பு ஆர்வலர்களும், பள்ளி நிர்வாகமும் மாநில மற்றும் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இது சம்பந்தமான கோரிக்கை திருச்சி எம்பி துரை வைகோவிடமும் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பராய்த்துறையில் மொத்தம் ஆறு பள்ளிகள் உள்ளன இதில் கிட்டத்தட்ட 1600 மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதில் தமிழக அரசின் பஸ் பாஸ் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்று மாநில அரசின் பேருந்தை பயன்படுத்துகின்றனர். தினமும் காலை மாலை 5-6 சிறப்பு கூடுதல் பேருந்துகளை பள்ளி குழந்தைகளுக்கு என தமிழக போக்குவரத்து துறை இயக்குகிறது.
திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில் மாநில அரசு பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பாக சாலை கடப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. உதாரணமாக 10 பேரிக்காடுகள் இவ்விடத்தில் ஜீயபுரம் காவல்துறையினரால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை மாலை போக்குவரத்து காவலர்களும், ரோந்து காவலர்களும் இவ்விடத்தில் போக்குவரத்தை சீரமைப்பதிலும் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக சாலை கடப்பதற்கும் உதவி செய்கின்றனர். திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில் குளித்தலை அரசு பேருந்து நிர்வாகம் காலை மாலை இரண்டு, மூன்று நிரந்தர பணியாளர்களை நியமித்து பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கு உதவி செய்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை துறை , NHAI சார்பில் TOLL நிர்வாகத்தில் இருந்து அவப்பொழுது இன்சிடென்ட் மேனேஜ்மென்ட் டீம் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக சாலை கிடைப்பதற்கு உதவி செய்கிறது. இவ்விடத்தில் NHAI சார்பாக எச்சரிக்கை விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் ஒரு பிளாக் ஸ்பாட் ஆகும் மிகவும் ஆபத்தான விபத்து ஏற்படக்கூடிய இடமாகும். இவ்விடத்தில் பாதசாரிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் சாலையை கடப்பது என்பது அபாயகரமான நிலையில் உள்ளது. 1990 ஆம் ஆண்டு திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில் மிகவும் மோசமான விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிட்டத்தட்ட பேருந்துக்காக நின்றிருந்த 10- 15 பள்ளி குழந்தைகளின் மீது லாரி ஏறி சம்பவ இடத்திலேயே அகால மரணம் அடைந்தனர்.
திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில் தற்பொழுது தற்காலிகமான பாதுகாப்பு முயற்சிகள் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மீண்டும் இது போல் விபத்து நடக்காமல் இருப்பதற்கு போதுமான நிரந்தரமான பாதுகாப்பு கட்டமைப்புகளில் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை 0745 மணி முதல் 1045 மணி கள ஆய்வு நடைபெற்றது இதில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட இயக்குநர் பிரவீன் குமார், ஜீயபுரம் DSP பாலசந்தர் , யுபாம்இன்டர்நேசனல் டீம் லீடர், டி கே பி டி எல் டோல் மேனெஜிங் கெட், ஜீயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன் , திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் ராதா, ஒன்றிய கவுன்சிலர் ராஜன் பன்னீர்செல்வம், திருப்பராய்த்துறை பஞ்சாயத்து தலைவர் , திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அய்யாரப்பன்,
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தங்கராஜ், ஒய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் ரெங்கசாமி மற்றும் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் தேவைகளை நகாய் டீமிடம் தெரிவித்தனர். அதாவது திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில் பாதசாரிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு நிரந்தர தீர்வுகள் சாலை பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision