திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் பேரிடர் கால மீட்பு பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

தேசிய பேரிடர் மீட்புப் படை துணைத் தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் குழுவினரின், நிலநடுக்கம் ஏற்பட்டு இடிந்த கட்டிடங்களுக்கு இடையே சிக்கிய நபர்களை மீட்கும் மாதிரி ஒத்திகை பயிற்சி, பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் மீட்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அதேபோல் இடுப்பாடுகளில் சிக்காமல் பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஒத்திகை நடத்திக் காட்டப்பட்டது. மேலும் ஈடுபாடுகளில் சிக்கி உள்ளவர்களை எந்தெந்த உபகரணங்கள் கொண்டு பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் துணை பொது மேலாளர் டி.முரளி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை அலுவலர் அனுசியா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn