ஊராட்சி மன்ற தலைவர் அலட்சியம் - கிராம மக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே குணசீலம் ஊராட்சியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி பகுதி மக்கள் காலி குடங்களுடன் குணசீலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குணசீலம் ஊராட்சியில் கடந்த மூன்று நாட்களாக முற்றிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும், குடிநீர் வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன், பொது மக்களிடம் இருந்து வரும் எவ்வித தொலைபேசி தொடர்பையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாகவும், மின்வாரிய பொறியாளர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேசாமல் திரும்பிச் சென்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி - சேலம் சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பொது மக்களிடம் வாத்தலை போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திமுக ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் சென்னையில் அவரது தொழிலை மட்டுமே கவனித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமர்ந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision