அதிரடிக்கு தயாராகும் பாக்ஸ்கான் ! அடுத்தது பேட்டரி வாகனங்கள்...

அதிரடிக்கு தயாராகும் பாக்ஸ்கான் ! அடுத்தது பேட்டரி வாகனங்கள்...

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் அசெம்பிள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளராக உள்ள பாக்ஸ்கான், சென்னையில் தன் தொழிற்சாலை வழியாக 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது. இதன் வழியாக ஆப்பிள் பிராண்ட் போன்களை பாக்ஸ்கான் தயாரித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டில் இந்தியாவில் தன் முதலீட்டை 2 மடங்காக உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளதாக பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி வி.லீ தெரிவித்துள்ளார். இந்த முதலீடானது செல்போன் உதிரிபாகங்களுக்கு மட்டுமல்லாது, செமிகண்டக்டர் உட்பட பிற தொழில்களில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர் பாக பாக்ஸ்கான் நிர்வாகிகள் கூறியதாவது... சென்னை தவிர, கர்நாடகாவில் 2 ஆயிரத்து 914 கோடி ரூபாய் செலவில் தொழிற்சாலை அமைத்து,12 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளுடன் ஆப்பிள் பிராண்ட் போன்கள், ஐபாட்கள் உற்பத்தி செய்யப்படும். சிப் உருவாக்கம் செய்யும் தொழிற்சாலை தனியாக அமைக்கப்படும்.

குஜராத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலை தொடங்குவது தொடர் பாக, அந்த மாநில அரசுடன் ஆலோசித்து வருகிறோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்மார்ட் போன் உருவாக்கத்துக்கு அப்பால், மின்சார பேட்டரியால் இயங்கும் வாகனங்களை உருவாக்குவது தொடர்பாக திட்டமிட்டு வருகிறோம். சிறிய அளவிலான, பட்ஜெட் விலை கார்களை உருவாக்குவது தொடர்பாக இந்தத்திட்டமிடல் உள்ளது. இந்தமுயற்சிகள் இந்தியாவில் உற்பத்தித் துறையை வளர்ப்பதுடன், புதிய வேலை வாய்ப்புகளையும் பெரும் அளவில் உரு வாக்கும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision