குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகரம் உய்யக் கொண்டன் திருமலை ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் மேரி தலைமையில் இன்று (04.07.2024) நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் என்போர் தாயின் கருவறை முதல் 18 வயது பூர்த்தியாகும் வரை உள்ளவர்கள் குழந்தைகள் என்றும் குழந்தைகளின் நான்கு வகை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பிற்கான உரிமை

பங்கேற்பதற்கான உரிமைகள் என்றும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.

ஐடிஎப்சி பஸ்ட் பாரத் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சிவா போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பிரச்சனைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சந்துரு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision