திருச்சியில் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு
கடந்த 11ஆம் தேதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த போது பாஜக ஓபிசி மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவின் கார் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. இதனையடுத்து தனது காரை சரி செய்து தருவதாக அந்த பேருந்தின் உரிமையாளர் ஒப்புக் கொண்டதையடுத்து 10 நாட்களுக்கு மேலாகியும் சரி செய்து தரவில்லை.
இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த பேருந்தை சூரிய சிவா தனது ஆதரவாளர்களுடன் எடுத்துச் சென்று தனது இடத்தில் வைத்துள்ளார் இதுகுறித்து இந்த பேருந்து உரிமையாளர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தனது பேருந்தை சூரிய சிவா ஆதரவாளர்களுடன் அந்த கடத்தி சென்றதாக புகார் அளித்தார்.
அதன்பேரில் நேற்று முன்தினம் திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்த சூரிய சிவாவை கண்டன் காவல்துறையினர் வளைத்துப் பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்
இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தூண்டுதலின் பேரிலேயே திருச்சி சிவா எம்பி மகனும், சமீபத்தில் பாஜக ஓபிசி மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட முயன்றனர்.
போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போலீசாரை மிரட்டும் வகையில் பாஜகவினர் ஒரு தரப்பினர் மிரட்டல் விடுத்ததால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்பட்டனர்.
இதனால் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டதுடன் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO