வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்த அமைச்சர்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு ஆதரித்து திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முசிறி ஒன்றியத்தில் உள்ள நெய்வேலி கிராமத்தில் உரையாற்றினார். முசிறி, மண்ணச்சநல்லூர் மக்களின் அடிப்படைத் தேவைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் எம் எல் ஏ தியாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மதிமுக சேரன் மற்றும் கழக நிர்வாகிகள் காட்டுக்குளம் கணேசன், தங்கையன், வசந்தகுமார், கருணை ராஜா, பிரகதீஸ்வரன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision