திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி போக்குவரத்து கோட்டம் - திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேட்டி

திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி போக்குவரத்து கோட்டம் - திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேட்டி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரையிலான வட்ட பேருந்து சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்)லிட்., திருச்சி மண்டலம் துவாக்குடி கிளை நகரப்பேருந்து மூலம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிககுழுவின் பரிந்துரையின்படி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்புலிவார்டு ரோடு, காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளிலிருந்து

திருச்சி மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, உறையூர் போன்ற பகுதிகளுக்கு சென்று பயன்பெறும் வகையில் கீழ்கண்டவாறு வட்ட பேருந்து மூலம் தினசரி 13 நடைகள் இயக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி..... கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் செயல் பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக, திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது. எனவே, திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி போக்குவரத்து கோட்டம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது குறித்து ஆதவ் அர்ஜீன் பேசிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து, முதிர்ச்சியற்ற கருத்து என கட்சியின் மாநில நிர்வாகிகளே தெரிவித்து விட்டனர். எனவே இது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை.

வி.சி.க சார்பில் நடைபெறும் மதுவிலக்கு மாநாடு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படக்கூடிய மாநாடு. மக்கள் விழிப்புணர்வுக்காக நடத்தப்படுகிறது. இதில் அரசியல் கலக்கக்கூடாது என விசிக தலைவரும் தெரிவித்துள்ளார் மதுவிலக்கு துறை அமைச்சரும் தெரிவித்துவிட்டார் என கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision