கலைநயமும் கற்பனை திறனுமே ஆரிவொர்க்கின் அடிப்படை -ராஜலெட்சுமி

கலைநயமும் கற்பனை திறனுமே ஆரிவொர்க்கின் அடிப்படை -ராஜலெட்சுமி

நமது கலாசாரத்தில் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் ஆடை மிகவும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. சிறப்பான நிகழ்ச்சிகளில் உடுத்தப்படும் ஆடைகள் எப்போதும் மறக்க முடியாது. விலையுயர்ந்ததாகவும், மதிப்பு மிக்கதாகவும் இருக்க வேண்டும் என நினைப்பர். அதிலும் பெண்கள் அழகாக இருக்க ரசனையாக ஆடை உடுத்துவர். விசேஷ நிகழ்ச்சிகளில் ஆடை வடிவமைத்துறை முக்கியம் இடம் பெறுகிறது.

பெண்கள் அணியும் ரவிக்கை கூட கைவினைவேலை பாடுகளுடன் ஜொலிக்கின்றன. அந்த வகையில் பன்னாட்டு திறமையோடு பலதரப்பட்ட முன் அனுபவத்தோடு பெண்களுக்கு ரவிக்கை தைத்து தருகிறார் திருச்சியை சேர்ந்த ராஜலட்சுமி. சிறு வயதிலிருந்து ஆர்ட் அண்ட் கிராப்ட் என்றால் மிகவும் பிடிக்கும் பள்ளியில் கைவினை பயிற்சியில் எம்ராய்டரி கத்துக் கொண்டேன் அதன் மீது இருந்த ஆர்வமே இந்த துறையை தேர்வு செய்வதற்கான காரணம். கடந்த 15 வருடங்கள் ஆக இதை செய்து வருகின்றேன்.

கடந்த ஏழு வருடங்களாக பலருக்கு பயிற்சி அளித்து வருகிறேன் தொழில் முனைவோர் அமைப்பின் இரண்டு ஆண்டுகளாக பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறேன். ஆறு வருடங்களாக தனியார் கல்லூரிகளுக்கும் சென்று ஆரி ட்ரெய்னிங் அளித்து வருகிறேன். https://www.instagram.com/sheelugnanasekaran?igsh=MTg2Z3ptZ3Bvd2pqNw==

இங்கு நம்முடைய வெற்றி தோல்வி என்பது நம்முடைய தனித்திறமை மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையையும் கடின உழைப்புமே ..எதிலும் வெற்றி என்பது அவ்வளவு எழுந்தாய் கிடைத்து விடுவதில்லை பல பெண்கள் கேலி பேச்சுவீர்கள் எல்லாவற்றையும் கடந்து தான் நம் பயணிக்க முடியும் அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால் இன்னும் கூடுதல் சவால்களையும் சந்திக்க நேரிடும் அப்படி ஒவ்வொரு சவால்களையும் என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் சந்திக்க நேர்ந்தது அதை அனைத்தையும் என் உழைப்பின் கிடைத்த வெற்றியாலேயே முறியடிக்க முடிந்தது. புதுமைப்பெண் தன்னம்பிக்கை நாயகி சிறந்த தொழில் முனைவோர் என்ற பல விருதுகளையும் வென்றுள்ளேன்.

 கடந்த ஆண்டு நோபல் வேல்டு ரெக்கார்ட் மூலம் 300ஆரி எம்ராய்டரி செய்யும் தொழிலாளர்களைக் கொண்டு எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்ஐவி லோகோவை ஒன்றரை மணி நேரத்தில் செய்து முடிக்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததற்காக சிறந்த ஒருங்கிணைப்பாளர்கான உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தேன்.

இன்று ஆரி பயிற்சி மையத்தினை நடத்தி வருகிறேன். SHEELU DESIGNER'S SHEELU Institute of arf & craft Big kammala street. Trichy -8 பல்வேறு கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர் இவை எல்லாவற்றிற்குமே காரணம் என் தனி திறமையின் மீது நான் வைத்த நம்பிக்கையை இங்கு என்ன செய்கிறோம் என்பதை விட அதை எப்படி செய்கிறோம் என்பதில் தான் வெற்றியை தீர்மானிக்கப்படுகிறது என்று கூறும் ராஜலட்சுமி உண்மையில் பாரதி கண்ட புதுமைப்பெண்ணே!!

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision