மாநகரில் உள்ள ஏரியில் 4 1/2 ஏக்கர் ஆக்கிரமிப்பு - மாநகர காவல் ஆணையரிடம் மனு
திருச்சி கொட்டப்பட்டு ஊர் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்று அளித்தனர். அம்மனுவில் கடந்த 28/6/2022 ஜேசிபி பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு கொட்டப்பட்டு ஏரி நீர் பிடிப்பு பகுதிகளையும்,
அதனை ஒட்டி உள்ள ஈவெரா கல்லூரிக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திடும் நோக்கத்தோடு உள்ளூர் வருவாய் துறையினர் மூலம் பெற்ற போலி பட்டா மற்றும் போலி பத்திர பதிவு ஆவணங்களை காட்டி ஆக்கிரமிப்பு வேலைகள் சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்றது.
இதை பார்த்த ஊர் பொதுமக்கள் இரண்டு ஜேசிபி இயந்திரங்களையும், அதனை இயக்கிய காஜாமலை உதயகுமார் என்ற நபரையும் கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது ஜே சி பி இயந்திரம் இரண்டும் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளன.
உண்மையில் இந்த நிலங்கள் 1965இல் திருச்சியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி தற்போது (தந்தை பெரியார் அரசு கல்லூரி) அமைத்திட நிலம் கையகப்படுத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டு முறையாக கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த இடப்பகுதியில் சுற்று சுவரும் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு மூலம் அரசு கல்லூரி வளாகத்தில் வேறு பாதை ஏதும் இல்லாததால் இதில் 4.5 ஏக்கர் நிலத்தை போலி பட்டா மற்றும் வட்டாட்சியர் கடிதம் மற்றும் போலி பத்திரப்பதிவுகள் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்த நபர்களை குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களை குற்றவியல் நடைமுறைப்படி கைது செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLano