திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கம் சார்பில் ரூ.500 மதிப்புள்ள காய்கறிகள் 350 ரூபாய்க்கு வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்யும் திட்டம் தொடக்கம்.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கம் சார்பில் ரூ.500 மதிப்புள்ள காய்கறிகள் 350 ரூபாய்க்கு வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்யும் திட்டம் தொடக்கம்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்களது இல்லங்களுக்கு சென்று விநியோகிக்க மாவட்ட ஆட்சியரின் முயற்சியின் பேரில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கம் சார்பில் 500 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் 350 ரூபாய்க்கு தொகுப்பு காய்கறி பை வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இதில் தக்காளி, வெங்காயம், உருளைகிழங்கு, சேனைக்கிழங்கு, கத்திரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய் உள்ளிட்ட 20 வகையான காய்கறிகள் மற்றும் கொத்தமல்லி, புதினா, கருவேப்பில்லை அடங்கிய தொகுப்பு 350 ரூபாய்க்கு வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யப்படுகிறது.

500 ரூபாய் மதிப்பிலான இக்காய்கறிகள் லாபநோக்கின்றி சேவை மனப்பாங்குடன் அசல் விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிரமம் இருந்தாலும் மக்களின் நலன்கருதி செயல்படுவதால் இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு சென்று விநியோகிக்க அனுமதியினை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் 9952674747 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்தால் காய்கறிகள் சப்ளை செய்யப்படும். இரவு 9 மணிக்குள் காய்கறிகளை ஆர்டர் செய்தால் காலை 6 மணிக்குள் வீடுதேடி காய்கறிகள் வந்து சேர்ந்து விடும்.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மூலமாக விற்கப்படும் 20 வகையான காய்கறி பொருட்கள் ஒரு குடும்பத்திற்கு 2 வாரங்களுக்கு பயன்படும்.

350 ரூபாய் தொகுப்பு காய்கறிகள் 

1. தக்காளி - 1 Kg
2. வெங்காயம் - 1 kg
3. உருளைகிழங்கு - 1kg 
4. சேனைக்கிழங்கு - 1kg
5. மல்லி - 1/2 kg
6. புதினா - 1/2 kg
7. கத்திரிக்காய் - 1/2 Kg 
8. முருங்கைக்காய் - 1/2 kg
9. அவரைக்காய் 1/4 kg
10. புடலங்காய் - 1/2 kg 
11. பாவக்காய் - 1/2 kg
12. காரட் - 1/2 kg 
13. பீட்ரூட் - 1/2 kg
14. பீன்ஸ் - 1/4 kg
15. சௌசௌ - 1/2 kg 
16. கோஸ் 1/2 kg 
17. மாங்காய்- 1
18. இஞ்சி - 1/4 kg
19. மிளகாய் - 1/4 kg
20. எழுமிச்சைபழம் - 5

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC