வாக்குசாவடி செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் - மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
தமிழகத்தில் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மூத்த குடிமக்கள், பார்வை மற்றும் இயக்க குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், தேர்தல் நாளில் வாக்களிப்பதற்கு அவர்களது இருப்பிடத்தில் இருந்து வாக்குசாவடி செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கீழ்க்கண்ட விபரப்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி பாரளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள் (Senior Citizens), பார்வை (Visual) மற்றும் இயக்க குறைபாடு (Locomotive disabilities), (Impaired Movement) வாக்களிக்கும் நாளில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும். பொதுப் போக்குவரத்து வசதி இல்லை என்றால், அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து
வாக்குச் சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும், இறக்கவும் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள வாக்காளர்கள் இந்த வசதிகளைப் பெறுவதற்கு ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சக்ஷம் இசிஐ ஆப் (SAKSHAM ECI APP) அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி (HELP LINE) வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள மேற்கண்ட வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision