அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர்வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர்வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயு தேர்விற்கு (17.03.2023) முதல் (31.03.2023) வரை http://agnipathvayu.cdac.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கான தேர்வு (20.05.2023) முதல் நடைபெற உள்ளது.

இப்பணிக்காலியிடத்திற்கு 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ள அல்லது பொறியியலில் டிப்ளமோ பட்டம் பெற்று குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ள மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ள 17-21 வயதிற்குள் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்காலியிடத்திற்கு திருமணமாகாத ஆண் குறைந்தபட்சம் 152.5 செ.மீ உயரம் மற்றும் பெண் குறைந்தபட்சம் 152 செ.மீ உயரம் உடையவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதியுடைய இளைஞர்கள் இணையதள தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது (0431-2413510), (94990-55901), (94990-55902) என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn