யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு

யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் அமைய உள்ள வன உயிரியல் பூங்கா பகுதியை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி வனக்கோட்டம் எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு சென்று, அங்கு பராமரிக்கப்படும் 10 யானைகள் நலன் குறித்தும், அவற்றுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகள் ஆகியவற்றினை கேட்டு யானைகளை சிறப்பாக பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும் அங்கு பராமரிக்கப்படும் யானைகளுக்கு உணவுகளை வழங்கியும், யானைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளியல் தொட்டிகள் மற்றும் யானைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குளியல் கூடத்தில் யானைகள் குளிப்பதையும் பார்வையிட்டார்.

 

பின்னர் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள வன விரிவாக்க மையத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மரக்கன்றுகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ராத் மஹாபத்ரா, வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn