5,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் போட்டித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

5,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் போட்டித் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) மூலம் 5,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு (Laboratory Attendant, Junior Accountant, Store Clerk, Lab Assistant, Junior Engineer, Nursing Officer, Pharmacist etc....) வருகின்ற (06.03.2023) அன்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இப்பணிக்காலியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதிற்குட்பட்ட அனைத்து வேலைநாடும் இளைஞர்கள் www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் (27.03.2023) வரை விண்ணப்பிக்கலாம். தொலைதூரத்தில் வசிக்கும் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், சமச்சீர் புத்தகங்களின் மென் நகல் (Softcopy), முந்தைய ஆண்டு வினாத்தாட்கள், பயிற்சி வகுப்புகளின் காணொளி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in உள்ளன.

இதனை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறும், திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்குமாறும் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்டு வரும் SSC போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் அடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn