ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆற்றுப்படுத்துநர் (1 பணியிடம்) : தொகுப்பூதியம் ரூ.18,536/- (ஒரு மாதத்திற்கு) சமூகப்பணி, சமூகவியல், உளவியல், பொது நலம் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் மாதிரி பெற்றிருக்க வேண்டும்.

(10+2+3) (Graduate in Social Work/Sociology/Psychology/Public Health/ Counselling from a recognized University (அல்லது) ஆற்றுப்படுத்துதல் மற்றும் தொடர்பு பிரிவில் முதுகலை பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும். (PG Diploma in Counselling and Communication) அரசு / தொண்டு நிறுவனத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பணியில் வருட பணி அனுபவம் இருக்க வேண்டும் கணினி இயக்குவதில் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். (31.10.2024) அன்றுபடி 42 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் : முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல். சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல் https://tiruchirappalli.nic.in மேற்பதவிக்கான விண்ணப்படிவத்தினை இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் (07.12.2024) அன்று மாலை 5:30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்த சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு. N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி 620 001. மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision