நீர் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்பு போராட்டம்
பொதுமக்களின் வாழ்வுரிமை மற்றும் விவசாயம் வாழ்வாதாரத்துக்கு காவிரியில் கதவுணையை உடன் கூடிய தடுப்பணை கட்டி தர வேண்டும். மேலும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சிறுகமணி கிராமம் மற்றும் பெருகமணி கிராமத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மணப்பாறை சிப்காட்டு தொழிற்சாலைக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் செயல்பட உள்ளது.
இதில் நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டர் தண்ணீர் மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் சூழல் உருவாக உள்ளது. இப்பகுதியில் நிலத்தடி நீர் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்த தண்ணீர் உறிஞ்சும் திட்டத்தை கைவிட வேண்டும். என வலியுறுத்தி விவசாயிகள் பொதுமக்கள் மக்கள் நல ஆலோசனை மையம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறும்போது..... மணப்பாறை சிப்காட் தொழிற்சாலைக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால் சட்டவிரோதமாக அங்கு மணல் அள்ளப்பட்டு ராட்சத குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். மேலும் அங்கு தடுப்பணை ஒன்றை கட்டித் தர வேண்டும். அதன் பின்னர் இந்த பணிகளை துவங்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த கட்டமாக காவிரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision