பெருக்கெடுத்து வரும் காவிரி நீர் - 25 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு, தரை பாலம் மூழ்கின

பெருக்கெடுத்து வரும் காவிரி நீர் - 25 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு, தரை பாலம் மூழ்கின

கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழையின் காரணமாக  மாநிலத்தில் உள்ள  கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனவே, அணைகளுக்கு வரக்கூடிய உபநீரை திறந்து விடப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து. அந்த அணை நிரம்பியதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரக்கூடிய உபரிநீரை காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் தற்போது வெள்ளம் போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஏற்கனவே திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியாளர்கள் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட  ஒரு இலட்சத்து 32 ஆயிரம் கனஅடி  தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரியாற்றில் 47874  கன அடியும், கொள்ளிடம் ஆற்றில்  65639 கன அடியும், பாசன வாய்க்காலில் ஆயிரம் கன அடியும் , அய்யன்பெருவளை, புள்ளம்பாடி ஆகிய வாய்க்காலில் 875 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் காவேரி கரையோரப் பகுதியான கல்லணை சாலையில் உள்ள உத்தமர் சீலி, திருவளர்சோலை, கிளிக் கூடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 25 ஏக்கருக்கு மேற்பட்ட வாழைகள், கரும்பு மற்றும் பிச்சிப்பூ  ஆகியவற்றில் நீரில் முழ்கி பாதிப்பு.

திருச்சியிலிருந்து கல்லணைக்கு செல்லும் கிளிககூடு பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுவதும் காவிரி நீர் செல்வதால் போக்குவரத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY#

டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO