ஹார்லே டேவிட்சன் எக்ஸ் 440 பைக்: அறிமுகம் செய்தது 'கேஆர்டி'
திருச்சி திருவானைக்காவல் கேஆர்டி ஹீரோ ஷோரூ மில் ஹார்லே டேவிட்சன் எக்ஸ் 440 ரக பைக் அறிமுக விழா நடைபெற்றது. ஜிவிஎன் மருத்துவமனை குழும நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில் பைக்கை அறிமுகம் செய்து, முதல் 7 வாடிக்கையாளர்களுக்கு பைக்கின் சாவிகளை வழங்கினார்.
இதுகுறித்து கேஆர்டி ஹீரோ நிர்வாக இயக்குனர் வெங்கடேசன் கூறியது..... சென்னை கோவை பகுதியில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த ஹார்லே டேவிட்சன் எக்ஸ் 440 ரக பைக் திருவானைக்காவல் கேஆர்டி ஹீரோ ஷோரூம் மூலமாக திருச்சி மாவட்டத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வாகனம் 440 சிசி செயல் திறன் கொண்டது. இதில் ஆயில்கூல்டு மற்றும் ஏர் கூல்டு செயல்திறன் உள்ளது. நகர மற்றும் நெடுஞ்சாலை பயணத்திற்கு சிறந்தது.
இந்த பைக்கில் ட்ரெல் லிஸ் ப்ரேம்' பயன்படுத்தப்பட்டுள்ளதால் இந்த பைக் அதிக வலுவாகவும், பாதுகாப்பாகவும் இயக்குவதற்கு எளிதாக உள்ளது. டைமண்ட் கட் அலாய் வீல்கள், யூஎஸ்டி 43எம்எம் ப்ரன்ட் சஸ்பென்ஷன், பின்புறம் காஸ் பில்டு ட்வின் ஷாக்ஸ். 7 ஸ்டெப் அட் ஜஸ்டபிள் 6 கியர் ட்ரான்ஸ்மிஷன், 140 எம் எம் ரியர் டயர் ஆகியவை உள்ளன. ஒரு வருடத்திற்கு 3 இலவச சர்வீஸ், வருடம் ஒரு முறை இலவச சர்வீஸ் போன்ற பல்வேறு சலு கைகள் அளிக்கப்பட்டுள்ளது. கேஆர்டி ஹீரோவில் இந்த ஹார்லே டேவிட்சன் பைக்கை வாங்கி உங்கள் பயணத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.செயல் அதிகாரி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision