தனி நல வாரியம் அமைக்கக்கோரி இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் தொழிற்சங்க ஆண்டு விழா கூட்டத்தில் தீர்மானம்.

தனி நல வாரியம் அமைக்கக்கோரி இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் தொழிற்சங்க ஆண்டு விழா கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மலைக்கோட்டை மாநகர இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்க திருச்சி மாவட்டம் சார்பில் ஆண்டு விழா திருச்சி பொன்மலைப்பட்டி ரோடு ஸ்ரீராம் மஹாலில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் செல்வமணி வரவேற்புரை ஆற்றிட, இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்‌. மாவட்ட இணை செயலாளர் செல்வம் மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சையத் தெரியாத ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக கௌரவ தலைவர் லட்சுமணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

இந்த ஆண்டு விழா கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக :- தமிழக அரசு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்கத் தொழிலாளிகளுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரியும், மெக்கானிக் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தின் முன்னேற்றத்திற்காக வழங்கக் கூறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது‌. கூட்டத்தில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்க செயலாளர் அன்புராஜ் அளித்த பேட்டியில்...,, இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் தொழிற்சங்கத்திற்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் பேட்டரி வாகனங்கள் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக இருசக்கர வாகன பழுது நீக்குவோர் வாழ்வாதாரம் பாதிக்கிறது. மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் விளைவு உயர்வு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் பத்து லட்சம் பழுது நீக்குவோர் பேர் இருக்கிறோம் என  கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision