திருச்சி பொம்மை குடோனில் தீ விபத்து

திருச்சி பொம்மை குடோனில்  தீ விபத்து

திருச்சி பால்பண்ணை விஸ்வாஸ் நகர் முதல் தெருவில், பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் குடோனில் திடீரென தீப்பிடித்து எறிந்தது. பிளாஸ்டிக் குடோனில் குழந்தைகள் விளையாடக்கூடிய பொம்மை, கார், சைக்கிள் உள்ளிட்ட சிறு சிறு பொருட்கள் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு விட்ட நிலையில் அந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறிது.

தீயணைப்பு வீரர்கள் தீயை மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். அசம்பாவிதம் ஏற்படா வகையில் ஆம்புலன்ஸ் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த பிளாஸ்டிக் பொம்மை தயாரிக்கும் குடோனை நடத்தி வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொம்மைகள் எரிந் து நாசமாகி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision