திருச்சி ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை ரயிலில் அடிபட்டு பலி

திருச்சி ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை ரயிலில் அடிபட்டு பலி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் நேற்று முன்தினம் (22.01.2023) ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடியைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் காளையும் பங்கேற்றது. வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளையை, உரிமையாளரால் மீண்டும் பிடிக்க முடியவில்லை.

சுதாகரும், அவரது குடும்பத்தாரும் காளையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், திருச்சி - தஞ்சை ரயில் வழித்தடத்தில், குமரேசபுரம் அருகே அந்த ஜல்லிக்கட்டு காளை ரயிலில் அடிபட்டு இரண்டு துண்டுகளாக கிடந்தது தெரிய வந்தது. இதையறிந்த சுதாகரும், அவரது குடும்பத்தாரும் அங்கு சென்று, காளையை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் காளைகளை பிடிப்பதற்கு பல கிலோமீட்டர் உரிமையாளர்கள் ஓடி சென்று பிடிப்பார்கள். அப்படி ஓடும்போது தண்டவாளத்தை கடந்த காளை ரயிலில் அடிபட்டு இறந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn