LA திரையரங்கை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது

LA திரையரங்கை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது

1990-களில் ஜம்மு - காஷ்மீரில் இந்து பண்டிட்டுகள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறியதாக கதைக்களத்தை மையமாக வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தை எதிர்ப்புகளையும் மீறி அண்மையில் திரையிடப்பட்டுள்ளது. தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த திரைப்படமானது திருச்சியில் எல்.ஏ திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீது அடக்கு முறையை கையாளும் மத்திய அரசானது தற்போது காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் மூலம் நாட்டின் ஒற்றுமையை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்கிறது என்றும், எனவே ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்து வெறுப்பை விதைக்கும்
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம்  வெளியாகும் திருச்சி எல்.ஏ சினிமா தியேட்டரை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்டிபிஐ கட்சி மண்டல தலைவர் அப்துல்லாஹ் ஹஸ்ஸான் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர்

இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து தியேட்டரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர், எஸ்டிபிஐ கட்சியினரின் முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO