அன்பில் கிராம மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய அமைச்சர்கள்

அன்பில் கிராம மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய அமைச்சர்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உப கோவிலான லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும்.

இந்த ஆலயத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக திருதேரோட்ட விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் புதிதாக தேரை உருவாக்க வேண்டும் என்று தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு அன்பில் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனடிப்படையில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய திருத்தேர் உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கிய திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்த தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தேரை பக்தர்கள் கோயிலைச் சுற்றி்வலம் வந்து தேர் கோயில் நிலையினை அடைந்த்து. இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO