திருச்சி கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களை நவீனமாக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவு

திருச்சி கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களை நவீனமாக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவு

இந்தியாவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் அம்ரித்பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1,275 ரெயில் நிலையங்களை பல ஆயிரம் கோடியில் மேம்படுத்தும் பணியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதில், தெற்கு ரயில்வேயில் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட லால்குடி, ஸ்ரீரங் கம், அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, மன்னார்குடி, திருவாரூர், போளூர், விருத்தாசலம், விழுப்புரம், காரைக்கால், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட் ஆகிய 15 ரெயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த திட்டத்தில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளான லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்தம் வசதி, கண்காணிப்பு கேமரா, கழிப்பறை வசதி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 15 ரெயில் நிலையங்களில் சராசரியாக 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision