தாசில்தார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாசில்தார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்குளம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் தேவேந்திர வேளாளர் தெரு மற்றும் மாதா கோவில் தெரு பகுதியில் உள்ளவர்கள் சாலையை ஆக்கிரமித்து மரங்களை வைத்து வேலிகளை அடைத்துள்ளனர். இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள சாலைகளையும் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டதை தொடர்ந்து திரு நெடுங்களம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வியிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்செல்வி ஆலோசனையின் படி திருவெறும்பூர் தாசில்தார் சிவப்பிரகாசத்திடம் திரு நெடுங்குளம் ஊராட்சியில் தேவேந்திர வேளாளர் தெரு மற்றும் மாதா கோவில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு கோரிக்கை வைத்தனர். 

அதன் அடிப்படையில் வருவாய்துறையினர் திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவேந்திரகுல வேளாளர் தெரு மற்றும் மாதா கோவில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதியை அளவீடு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று சிவப்பிரகாசம் மற்றும் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கருப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது

 அப்பொழுது சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக துவாக்குடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் கமலவேனி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision