திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில் மாநகர மக்களின் பேராதரவோடு 50 வது வருட பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இவ்வாண்டும் வருகின்ற நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு (03.10.2023) முதல் (31.10.2023) வரை (ஞாயிறு உட்பட) கொலு கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரபாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.25000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

திருச்சி சர்வதேச விமான நிலையம், பொது மேலாளர் (பொறியியல்) B.செல்வகுமார், இக்கண்காட்சியை குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார். இக்கன்காட்சி இடம்பெற்றுள்ள துலாபாரம், அஷ்ட பைரவர், செட் நவதுர்கா வாகனம், விளையாட்டு செட், வேத மோள் செட், கார்த்திகை தீபம், கிரிக்கெட் பண செட்ட தசாவதாரம், அஷ்டலக்ஷக்ஷ்மி செட், கயிலாய மலைசெட், அன்னபூரணி செட், விநாயகர் செட், மாயா கல்யாணம் செட்,

மீனாட்சி கல்யாணம் செட், மும்மூர்த்தி செட் ராமர் பட்டாஅபிஷேகம் செட், தாத்தா பாட்டி செட், பெருமாள் தாயார் செட் மற்றும் கல்கத்தா, மணிபூர். ராஜஸ்தான் ஓரிஸா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள், எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சியில் காட்சிக்கும், விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து சுருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை திருச்சி மாநகர மக்கள் வாங்கி தங்க இல்லத்திற்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision