கோரையாற்று வெள்ளப்பெருக்கால் மக்கள் பெரும் பாதிப்பு - 196 பேர் தீயணைப்பு துறையினரால் மீட்பு

கோரையாற்று வெள்ளப்பெருக்கால் மக்கள் பெரும் பாதிப்பு - 196 பேர் தீயணைப்பு துறையினரால் மீட்பு

திருச்சி கோரையாறு வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக வயலூர் சாலையில் உள்ள சண்முகா நகர், எம்.எம்.நகர், உய்யகொண்டான் திருமலை பகுதிகளில் மழை நீரின் அளவு வீடுகளில் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இதேபோல் அரியாறு வாய்க்கால் கரை உடைப்பிலிருந்து வரக் கூடிய மழை நீர் கோரையாற்றில் கலக்கிறது. இதனால் உறையூர் மேல பாண்டமங்கலம் பகுதியில் உள்ள அரவானூர் கிராமத்தில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது .

தற்போது திருச்சி தீயணைப்பு நிலைய மேலாளர மெல்யுகிராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருச்சி எம்.எம். நகர் பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். இதுவரை 196 மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரையாறு வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் சண்முகா நகர், எம்எம் காலனி பகுதியில் இருந்து மீட்பு நடவடிக்கைக்கு அதிக அழைப்புகள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn